இயேசுவே நமக்கு திடஅஸ்திபாரமாயிருக்கிறார். நாம் அவரில் நிலைத்திருக்கும்போது, அவருடைய புயங்கள் நம்மை பாதுகாக்கும்; நம் வாழ்வு கனிகொடுக்கிறதாய் இருக்கும்....
எங்கள் புதிய பாடல்கள்


A Musical Tribute To Dr. Paul Dhinakaran


செட்டைகளை விரிக்கும் காலம்...


Stella Ramola & Daniel Davidson Sing Bro. D.G.S. Dhinakaran’s Greatest Hits


அரைஸ் ஜூக் பாக்ஸ்


காலம் மாறும்


A Musical Tribute To Dr. Paul Dhinakaran


செட்டைகளை விரிக்கும் காலம்...


Stella Ramola & Daniel Davidson Sing Bro. D.G.S. Dhinakaran’s Greatest Hits


அரைஸ் ஜூக் பாக்ஸ்


காலம் மாறும்
ஆசீர்வாத திட்டங்கள்
சாட்சியங்கள்

Haryana
விசுவாசித்தவளே பாக்கியவதி
என்னுடைய கணவர் பெயர் தீரஜ் சிங். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. பல மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றும், குழந்தை இல்லாததற்கான சரியான காரணத்தைக் கூறவோ.குறையை சரிசெய்யவோ அவர்களால் முடியவில்லை. ஆனாலும் நாங்கள் மனந்தளராமல் தொடர்ந்து ஜெபித்து வந்தோம். இயேசு அழைக்கிறார் தேசிய ஜெப கோபுரத்திற்கு நேரில் சென்றோம். ஜெப கோபுரத்தில் ஜெப வீரர்கள் எங்களுக்காக ஊக்கமாக ஜெபித்தனர். இந்நிலையில், குடும்ப ஆசீர்வாதத் திட்டத்தில் எங்கள் குடும்பத்தை இணைத்ததுடன். குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆண்டவர் தெய்வீக அற்புதத்தை செய்வார் என்று விசுவாசித்து இளம் பங்காளர் திட்டத்திலும் இணைத்தோம். சில மாதங்கள் கழித்து, ஆண்டவர் கிருபையாக எங்கள் ஜெபத்திற்கு பதிலளித்தார்; நான் கருவுற்றேன். ஆண்பிள்ளை வேண்டும் என்று நான் ஜெபித்து வந்தேன். 2023 ஏப்ரல் 28-ம் தேதி எங்களுக்கு மகன் பிறந்தான். அவனுக்கு ஐசக் என்று பெயரிட்டுள்ளோம். இயேசு அழைக்கிறார் ஊழியத்திலுள்ள ஜெப வீரர்களுக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் குடும்பத்தை கட்டியெழுப்பின தேவனுக்கே சகல மகிமையும் உண்டாகட்டும். - ஷிகா, ஹரியானா

Chennai
ஓர் இளம் பங்காளரின் சாட்சி:
நான் இயேசு அழைக்கிறார் இளம் பங்காளர். நான் 11, 12 ஆகிய வகுப்புகளில் படித்தபோது, பாடங்கள் சிரமமாக இருந்தது. அப்போது இயேசு அழைக்கிறார் தொலைபேசி ஜெப கோபுரத்தை அடிக்கடி தொடர்புகொண்டு ஜெபித்தேன். ஒரு ஜெப வீரர், தேவன் எதிர்காலத்தில் ஜனங்களை ஆறுதல்படுத்தவும், உள்ளமுடைந்த மக்களை தேற்றவும் என்னை பயன்படுத்துவார் என்று கூறினார். என்னுடைய தனி தியானத்தில் நான் ஜெபித்த காரியங்களை அவரிடம் பகிர்ந்து கொள்ளாதபோதும், அவர் மிகச் சரியாக தீர்க்கதரிசனமாக அவற்றுக்காக ஜெபித்தார். 2022-ம் ஆண்டு நடந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) நான் 632/720 மதிப்பெண் பெற்று, தற்போது வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறேன். எல்லா ஜெப வீரர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். தேவன் எனக்கு பாராட்டிய தயவுக்காக அவருக்கே சகல துதியும் மகிமையும் உண்டாவதாக.
- S. நிஷா வெரோனிக்கா, சென்னை.