இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரங்கள் - நம்பிக்கை அளிக்கும் ஸ்தலங்கள்
இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரங்கள், ஜெபத்தின் மூலம் மக்களின் வாழ்க்கையில் புது நம்பிக்கையை விளங்கப்பண்ணும் ஸ்தலங்களாக விளங்கி வருகின்றன. ஜெப கோபுரங்களில் தினமும் நடக்கும் வல்லமையான அற்புதங்களைக் கண்டு கர்த்தருக்குள் களிகூருகிறோம்.
ராஞ்சி பட்டணத்திற்கு இயேசு தேவை
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சி. இங்கு ஏறக்குறைய 16 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த மக்களுக்கு ஆன்மீகரீதியான, உணர்வுரீதியான பல போராட்டங்கள் காணப்படுகின்றன. ராஞ்சியிலிருந்து அநேகர், திருமண வாழ்வின் ஆசீர்வாதத்திற்காக, கணவன் / மனைவியின் மன மாற்றத்திற்காக வேலைவாய்ப்புக்காக அசுத்த ஆவிகள் மற்றும் அடிமைத்தன பழக்கங்களிலிருந்து விடுதலையும் சுகமும் பெறுவதற்காக 34, 35 வயதாகியும் ஏற்ற வாழ்க்கைத் துணை அமையாமல் அநேகர் கஷ்டப்படும் நிலையில், பொருத்தமான வாழ்க்கைத் துணைக்காக ஜெபிக்கும்படி இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கு ஜெப விண்ணப்பம் அனுப்புகின்றனர்.
ராஞ்சியிலுள்ள மக்களுக்காக ஊக்கமாக ஜெபிக்கவேண்டிய இந்நிலையில் ராஞ்சி ஜெப கோபுரம், இப்பட்டணத்தின் மக்களுக்கு நம்பிக்கையையும் சுகத்தையும் வாழ்வில் நல்ல மாற்றத்தையும் அளிக்கும் இடமாக விளங்குகிறது.
ராஞ்சியின் தேவன் செய்த அதிசய கிரியை குறித்த சாட்சி
சினைப்பை கட்டி குணமானது
2017ம் ஆண்டிலிருந்து என் சினைப்பையில் ஒரு கட்டி இருந்து வந்தது. அதனால் என் உடல்நலம் அதிக பாதிப்புக்குள்ளானது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக என் தந்தை என்னை ராஞ்சியிலிருந்து ரூர்கேலாவுக்கு அழைத்துச் செல்வார். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. உடலில் ஹார்மோன்கள் சரியாகவில்லையென்றால் இந்தக் கட்டி சினைப்பை புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். 2023 பிப்ரவரி மாதம், ராஞ்சி இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டேன். அங்கு தேவ ஊழியர் எனக்காக ஜெபித்தார். ஆண்டவர் என்னை அற்புதவிதமாக குணமாக்கினார். அன்றிலிருந்து நான் பூரண குணமாக இருக்கிறேன். தேவன் பாராட்டிய இரக்கத்திற்காகவும் அவருடைய சுகமளிக்கும் வல்லமைக்காகவும் அவரை துதிக்கிறேன்.
- கிரண் கேர்கேட்டா, ராஞ்சி
ஊழியத்தின் விரிவாக்கம்
- தற்போது ராஞ்சியில் ஜெப இயக்கம் வளர்ந்து வருகிறது.
- நாம் இந்தப் பட்டணத்தில் 1000 ஜெப வீரர்களை எழுப்பவேண்டும்
- ராஞ்சியின் 24 மாவட்டங்களிலும் நற்செய்தியை பரப்பும்படி ஸ்தானாபதிகள், வாலிபர் ஊழிய பொறுப்பாளர்கள் மற்றும் நற்செய்தியாளர்களை எழுப்பவேண்டும்.
- பங்காளர்கள், மற்றவர்களுக்காக ஜெபிக்கிறவர்களாக மாறும்படி பயிற்சி அளிக்கவேண்டும்.
ராஞ்சி ஜெப கோபுர விரிவாக்கமும் புதுப்பிக்கும் பணியும்
தற்போது ராஞ்சி ஜெப கோபுரம், வணிக பயன்பாட்டு கட்டடத்தில் இயங்கி வருகிறது. ஊழியத்தை விரிவாக்கவும், ஜனங்களுக்கு இன்னும் நன்றாக சேவை செய்யவும் கீழ்க்காணும் புதுப்பிக்கும் பணிகள் அவசியமாயிருக்கின்றன.
- வார நாட்களிலும் அலுவலக நேரங்களிலும் தொந்தரவு இல்லாமல் கூட்டங்களை நடத்துவதற்கு ஒலி தடுப்பு அமைப்பு கொண்ட அரங்கம்
- தியான அறை புதுப்பித்தல் - மக்கள் தனியாக, மன்றாடி ஜெபிக்க அமைதியான சூழலை உருவாக்குதல்
- அதிகரித்து வரும் தொலைபேசி அழைப்புகளை நிர்வகிக்க அதிக எண்ணிக்கையில் கருவிகளை பொருத்தி, தொலைபேசி ஜெப கோபுரத்தை மேம்படுத்துதல்
- பராமரிப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்டவிதங்களில் ஜெப கோபுரத்தை புதுப்பித்தல்
இந்த ஊழியத்தில் பங்கு பெறுங்கள்
ஜெபிக்கிறதிலும் ஊழியம் செய்கிறதிலும் எங்களோடு இணைந்துகொள்ளும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம். ராஞ்சி ஜெப கோபுரத்தில் நீங்கள் தன்னார்வ ஊழியம் செய்ய விரும்பினால் உங்களைப் பற்றிய முழு விவரங்களை [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்திடுங்கள் அல்லது 9709684500 என்ற எண்ணில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை ஜெப கோபுர மேலாளரை தொடர்புகொள்ளுங்கள்.
ஊழியத்தை தாங்குங்கள்
- நீங்கள் ஜெபத்தினாலும் பொருளாதார உதவியினாலும்
- ராஞ்சி ஜெப கோபுர புதுப்பித்தல் மற்றும் விரிவாக்க பணிக்கு
- ஜெப வீரர்களை எழுப்புவதற்கு
- ஊழிய சேவைகளை விரிவாக்குவதற்கு உங்கள் பங்களிப்பை வழங்கலாம்
இந்தப் பணிக்கு கணக்கிடப்பட்டுள்ள தொகை: ரூ. 60 முதல் ரூ.70 லட்சம்
நீங்கள் உதாரத்துவமாக அளிக்கும் காணிக்கை, கணக்கற்ற மக்கள் தங்கள் வாழ்வில் தேவனுடைய அற்புத வல்லமையை அனுபவிக்க உதவும். நீங்கள் ரூ. 3 லட்சம், ரூ. 1 லட்சம், ரூ.50,000, ரூ.10,000 அல்லது ஆண்டவர் உங்களை வழிநடத்துகிறபடி எவ்வளவு தொகையையு நன்கொடையாக அளித்து தேவனுடைய பணியை தாங்கலாம்.
இந்த ஊழியத்தில் பங்கு பெறும் உங்களை ஆண்டவர்தாமே பூரணமாய் ஆசீர்வதிப்பாராக.