Dr. பால் தினகரனால் அறிவிக்கப்பட்ட
2025ம் ஆண்டுக்கான வெளிப்பாடுகள்

ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும். எசேக்கியேல் 34:26 

  • எனக்கு ஊழியம் செய்கிறவர்கள்மேல் என் கரங்கள் இறங்கும்.
  • நான் கட்டளையிடுகிறவைகளை நிறைவேற்ற அவர்கள் இருதயம் பக்குவப்படவும் இயற்கைக்கு அப்பாற்பட்ட என் வல்லமையை அனுபவிக்கவும் என் கரங்கள் அவர்களுக்காக கிரியை செய்யும்.
  • இதுவரை வெட்கத்தையும் ஏளனத்தையும் என் ஜனங்கள் அனுபவித்தார்கள்.
  • அவர்கள் பாடுகளிலெல்லாம் நானும் பாடுபட்டேன். அவர்களுடைய எல்லா வேதனையிலும் நானும் அவர்கள் வேதனையை சகித்தேன்.
  • அதற்கேற்றபடி நிச்சயமாகவே இப்போது நான் நியாயம் செய்வேன்.
  • என் ஊழியர்களை அதிகமாய் பெருகப்பண்ணுவேன்.
  • அவர்கள் எல்லைகளையெல்லாம் விரிவாக்குவேன். எல்லோரும் விரிவாக்கம் பெறுவார்கள்.
  • அவர்களுக்கு நியாயம் செய்யும்படி என் வல்லமையை விளங்கச் செய்வேன்.
  • அவர்களது வெட்கம் மற்றும் பாடுகளின் மத்தியிலும் அவர்கள் எனக்கு சகல மகிமையையும் தருவதில் கவனமாயிருந்தார்கள்; என் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு எல்லாவற்றிலும் உண்மையாய் இருந்தார்கள். நான் அவர்கள் பட்சத்தில் நிற்பேன். அவர்களுக்கு வாக்குக்கொடுத்தவைகளை என்னுடைய மகா வல்லமையினால் செய்துமுடிப்பேன்.
  • என் ராஜ்யத்தில் பெரிய பெருக்கமுண்டாகும். என் ஜனங்களுக்கு பரலோகம் திறந்திருக்கும்.
  • என் ஊழியக்காரர்கள் மேலும், என் ஜனங்கள்மேலும் என்னுடைய சந்தோஷத்தின், ஆசீர்வாதத்தின், அருட்கொடைகளின், கிருபையின், வரங்களின், கனத்தின் மழை பெய்யும்.
  • உங்களுக்கு ஒன்றுங்குறைவுபடாது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • பயப்படாதிருங்கள். திடமாக நில்லுங்கள். விசுவாசத்தில் ஐக்கியமாயிருங்கள். உதார குணமுள்ளவர்களாயிருங்கள். மன்னிக்கிறவர்களாயிருங்கள். ஆசீர்வதிக்கப்பட்டிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • உங்களுக்கு விரோதமாக இருளின் அதிகாரங்களால் உண்டாகும் அநீதியான செயல்கள் நிமித்தம் வரும் பொய்யான குற்றச்சாட்டுகளை கண்டு பயப்படாதிருங்கள். நான் நியாயம் செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • உங்களுக்கும் என் ராஜ்யத்திற்கும் என் ஜனங்களுக்கும் விரோதமாக ஆலோசனை செய்தவர்களை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள். இனி அவர்கள் காணப்படமாட்டார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • நீங்கள் இழந்த ஆண்டுகளையும், கடந்த காலத்தின் கனிகளையும் நிச்சயமாய் திரும்ப கொடுப்பேன்.
  • நீங்கள் அதிக கனி கொடுக்கும்படியும், திரளான பலனை பெறும்படியும், சதாகாலமும் நிலைத்திருக்கும்படியும் செய்வேன்.
  • உங்களை விரோதிக்கிறவர்கள் அகற்றப்படுவார்கள்; உங்களை ஆசீர்வதிக்கிறவர்கள் நிலைத்திருப்பார்கள்.
  • நீங்கள் இப்போது பலன் பெறுவீர்கள்; எல்லா சந்தோஷத்தோடும் என் ராஜ்யத்தை ஸ்தாபிப்பீர்கள்.

II. தேசமும் உலக நாடுகளும்

  • உலக நாடுகளை ஒன்றுபடுத்த தலைமைத்துவம் இல்லாமல் தேசங்கள் பெருங்குழப்பங்களை கடந்து செல்லும்.
  • ஒவ்வொரு தேசமும் தனக்கானவற்றை தானே பார்த்துக்கொள்ளும் நிலை வரும்.
  • எந்த தேசத்தை அல்லது எந்த கூட்டமைப்பை பின்பற்றுவது என்று தெரியாத நிலையில் தேசங்கள் காணப்படும்.
  • இதுவரை காணப்படாத அளவு இயற்கை சேதங்கள் உண்டாகும்.
  • தேசங்களில் வஞ்சகம் அதிகரிக்கும். பொருளாதார சந்தைகள் ஸ்திரமாக இருக்காது.
  • தேசிய ஆளுகை தன்னலம் மிக்கதாக இருக்கும். அநீதி மேலோங்கும்.
  • மக்களின் அசுத்தமான செயல்களால் தொற்றுநோய்கள் தீவிரமாக பரவி ஜனங்கள் கொடிய வேதனையை அனுபவிப்பார்கள்.
  • மனந்திரும்புதலின் செய்தி அனைத்து தளங்களிலும் பிரசங்கிக்கப்படும். திரளான மக்கள் ஆண்டவர் இயேசுவிடம் திரும்பி வருவார்கள்; அவரது அன்பில் அடைக்கலமாவார்கள்.
  • திரளான வாலிபர்கள் ஆண்டவரின் அரவணைப்புக்குள் திரும்பி வருவார்கள். திரளான எண்ணிக்கையில் அவர்கள் இயேசுவின் அன்பை பகிர்ந்துகொள்ளும் பணியை செய்வார்கள்.
  • இந்தியாவின் பல பாகங்களில் குறிப்பாக, தேவனையும் அவருடைய சமாதானத்தையும் கண்டுகொள்ள அவரை முழு மூச்சோடு தேடுகிறவர்களுக்கு ஆண்டவர் இயேசு நேரடியாக வெளிப்படுவார்.
  • இஸ்ரேல் தேசத்தின் எல்லைகளில் சமாதானம் காணப்படும். அங்கு அதிக மதிப்பு கொண்ட பொருள்கள் தோண்டியெடுக்கப்படும். தேசங்கள் மத்தியில் இஸ்ரேல் உயர்வான ஸ்தானத்தில் நிற்கும். அதன் ஜனங்கள் மத்தியில் என் சுவிசேஷம் ஏற்றுக்கொள்ளப்படும். அவர்களில் மாற்றம் உண்டாகும்.
  • ரஷ்யா, அண்டைநாடுகள் மத்தியில் தன் செல்வாக்கினை விரிவாக்கும்.
  • மத்திய கிழக்கு நாடுகள் தொடர்ந்து ஸ்திர தன்மையின்றி காணப்படும்; ஆனால், அத்தேசங்கள் மேலான என் அன்பு, அவற்றின் ஜனங்கள் மத்தியில் விளங்கும்.
  • ஆப்பிரிக்காவிலுள்ள தேசங்களை ஆளுகையிலும் வர்த்தகத்திலும் இணைக்கும்படி அத்தேசங்களின்மேல் என் கிருபை இறங்கும்.
  • இந்தியா, அண்டைநாடுகளின் மேல் தன் செல்வாக்கை விரிவுப்படுத்தும். ஆனால், என்னுடைய ஆவிக்குரிய வல்லமையும் இந்த தேசங்களுக்குச் செல்லும்.
  • இந்த ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் திறனும் எல்லை கட்டுப்பாடும் அதிகரிக்கும். அது செல்வாக்கு நிறைந்த தேசமாக திடமாக நிற்கும்.
  • அமெரிக்க ஐக்கிய நாடுகளில் என்னுடைய நாமத்திற்காக தியாகங்களை செய்த என் ஊழியர்கள், ஊழியத்தில் பெலன் பெற்று மறுபடியும் எழும்புவார்கள். நீதியுள்ளவர்கள் நிலைத்திருப்பார்கள்.
  • அற்புதங்களும் அடையாளங்களும் கொண்ட ஊழியங்கள் மீண்டும் உயிர்பெறும்.
  • பல்வேறு ஊழியங்களிடையே உறுதியான இணைப்பு உருவாக்கப்படும்.
  • என்னுடைய நாமத்தை சொல்லிக் கூப்பிடுகிற யாவரும் நிச்சயமாகவே என்னுடைய ஆவிக்குரிய ஆசீர்வாத மழையை அனுபவிப்பார்கள்.
  • 2025 ஆவிக்குரிய ஆசீர்வாத மழையின் ஆண்டு