"கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்..." (ஏசாயா 50:7). இதுவே, தேவன் உங்களுக்குத் தரும் வாக்குத்தத்தம். நான் வெட்கப்படுவதில்லை. வெட்கம் அடைந்துவிடுவேனோ என்ற பயமே அநேகரை வாட்டுகிறது. நம்மால் கடந்து செல்ல முடியாதபோது, மக்கள் நம்மை பரிதாபமாக, குற்றம் சாட்டப்பட்டவர்களாக பார்க்கும்போது வெட்கமடைகிறோம். நம்மால் சிறப்பாக வேலை செய்ய முடியாதபோது, தேர்வுகளில் தோல்வியுறும்போது வெட்கமாய் உணர்கிறோம். நாம் தவறான காரியங்களை பேசும்போது, மக்கள் நம்மைவிட்டு விலகிச்செல்லும்போது அவமானமாய் உணர்கிறோம். நாம் பாவத்தில் விழும்போது, நம்முடைய ஆத்துமாவே நம்மீது வெட்கத்தையும் இலச்சையையும் கொண்டு வருகிறது. ஆம், உலகத்தில் நமக்கு வெட்கத்தை உண்டாகும் பல காரியங்கள் உள்ளன. குழந்தையில்லாத தம்பதியர் பெரும்பாலும் அவமானமடைகின்றனர். வேலை இல்லாமல், வீடு இல்லாமல், வாழ்க்கை துணை இல்லாமல் இருக்கிறவர்கள் வெட்கமடைகின்றனர். வெட்கம், ஆவியை முறிக்கும். கனவுகளையும் நம்பிக்கையையும் அழித்துப்போடும் வல்லமை வெட்கத்திற்கு உண்டு.

ஆம், அதற்காகவே இயேசு வந்தார். அவர் உங்கள் வெட்கத்தை தம்மீது ஏற்றுக்கொண்டார். அவர் தேவனாக இருந்தாலும், ஊழியனின் ரூபத்தை எடுத்தார். அவர் தம்மை தாழ்த்தினார்; எல்லாரும் பார்க்கத்தக்கதாக, சிலுவையை சுமந்தார். தம்மைக் குறித்து தவறாய் குற்றம் சுமத்த அனுமதித்தார். தன்னை சிலுவையில் ஆணிகளால் அறையவும், உயிரை போக்கவும், பொல்லாத மனுஷர்கள் நிந்திக்கவும் அனுமதித்தார். ஏன்? உங்கள் வெட்கத்தின் வழியாக கடந்துசெல்லவே அனுமதித்தார். உங்கள் வேதனை புரிந்துகொள்ளவும் அப்படி செய்தார். ஆனால், அவர் நிறுத்தவில்லை. அவர் பிசாசின் கிரியைகளை அழித்தார். துன்மார்க்கரின் பொல்லாத வார்த்தைகளை அவர் அமர்த்திப்போட்டார். அவர் மரணத்தை அழித்து, மறுபடியும் எழுந்து, என்றென்றைக்கும் ஜீவனோடிருக்கிறார். வேதாகமம், "இயேசுவின் நாமத்தில் பூமியிலும், பூமிக்கு கீழும், பூமிக்கு மேலும் எல்லா முழங்கால்களும் முடங்கும். எல்லா பாவமும், எல்லா வியாதியும், எல்லா பிசாமும், எல்லா கடனும், பொல்லாப்பின் ஒடுக்குதலும் இயேசுவுக்கு முன்பு பணிந்து குனியும்.

இயேசு, "என் பிள்ளையே, என் நாமத்தில் எதையும் கேளுங்கள். நீங்கள் எதைக்கேட்டாலும் நான் அதைக் கேட்பேன்; நான் அதை செய்வேன்," என்று கூறுகிறார். நீங்கள் அவருடைய பிள்ளையாகும்போது இந்தக் கிருபையை அவர் தருகிறார். தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். நீங்கள் வெட்கமடைவதில்லை. இன்றைக்கு இயேசுவின் பக்கமாய் திரும்புங்கள். நீங்கள் ஆண்டவருக்காய் அனுபவித்த வெட்கத்தை அவர் கனமாய் மாற்றுவார். நீங்கள் வெட்கத்தை அனுபவித்த அதே இடத்தில், அவர் துதியையும் கனத்தையும் தருவார். இயேசுவை பற்றிக்கொள்ளுங்கள். அவரை தகப்பனாய் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வெட்கத்தை அவர் இரட்டிப்பான கனமாய் மாற்றுவார். இயேசு, தாம் சகித்த வெட்கத்திற்கு பதிலாக கோடானுகோடி மடங்கு கனத்தை வைத்திருக்கிறார். உங்களை வெட்கத்திலிருந்து தூக்கியெடுக்கவே அவர் இவை எல்லாவற்றையும் செய்கிறார். உங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள தேவையில்லை. துக்கத்திற்கு உங்களை முகத்தை மறைத்துக்கொள்ளவில்லை. இயேசுவிடம் வந்து அவரை நம்புங்கள். அவர் உங்கள் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றுவார். ஆம், அவர் சகல ஜனங்களுக்கும் முன்பாக உங்களை கனப்படுத்துவார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.

ஆரோக்கிய சாமி கிறிஸ்டி புஷ்பராணி அரசு ஆசிரியராக பணிபுரிகிறார். நான் பிரசங்கித்த ஒரு கூட்டத்திற்கு அவர் வந்திருந்தார். நான், "இயேசுவிடம் பரிபூரண ஆசீர்வாதங்களை கேளுங்கள். கேட்கிறவர்கள் யாவரும் பெற்றுக் கொள்வார்கள்," என்று கூறினேன். அவர் உருக்குலைந்த ஒரு ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து அனைவரும் அவரை கேலி செய்தனர். ஆலயத்திற்குக் கூட குடும்பத்தினரை அழைத்துச்செல்ல முடியவில்லை. ஆனாலும், அந்த வார்த்தைகளை விசுவாசத்துடன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டார். அவர் கார் ஓட்ட பயிற்சி பெற்றார். "ஆண்டவரே, எனக்கு ஒரு காரை தாரும்," என்று ஜெபித்தார். கார் வாங்குவதற்கு வசதியாக இல்லாவிட்டாலும், தேவன் அவரை கனப்படுத்தினார். தன்னுடைய பிள்ளைகள் இளம் பங்காளர் திட்டத்திலும், குடும்பத்தை குடும்ப ஆசீர்வாத திட்டத்திலும் இணைத்தார். ஆச்சரியவிதமாக தேவன் அவருக்கு ஒரு காரை கொடுத்தார். அவர் இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் மூலம் மற்றவர்களை தாங்கியதால், சிறு நிலம் வாங்குவதற்கும் தேவன் அவருக்கு உதவினார். ஆண்டவர் எல்லாவற்றையும் வாய்க்கப்பண்ணினார். இப்போது அவர்கள் நன்மையாய் வாழ்கிறார்கள். தேவன் உங்களுக்கும் உதவுவார்.

ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, வெட்கத்தினால் உடைந்திருந்தாலும், உம்முடைய இரக்கத்தை நம்பி உம்மிடம் வருகிறேன். நீர் என்னுடைய வெட்கத்தை உம்மீது ஏற்றுக்கொண்டு, அதை சிலுவையில் சுமந்தீர். என்னுடைய வேதனை, தோல்விகள், மறைந்திருக்கும் கண்ணீர் புரிந்துகொண்டீர். இன்றைக்கு துக்கத்தை, பயத்தை, கடந்த காலத்தை உம்முடைய கரங்களை ஒப்படைக்கிறேன். வெட்கத்திலிருந்து என்னை தூக்கியெடுத்து, கனத்தை எனக்கு உடுத்துவியும். என்னுடைய துக்கத்தை சந்தோஷமாகவும், பெலவீனத்தை பெலமாகவும் மாற்றும். எனக்கு தகப்பனாகவும், அடையாளமாகவும், நித்திய நம்பிக்கையாகவும் இருந்தருளும். என் ஆண்டவராகிய நீர் என்னோடு இருப்பதால் நான் வெட்கமடையமாட்டேன் என் விசுவாசித்து இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.