அன்பானவர்களே, "பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன்" (சங்கீதம் 75:3) என்ற வாக்குத்தத்தத்தின்படி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

சூழ்நிலை நம்பிக்கையற்று காணப்பட்டாலும், இந்த வசனம், எல்லாம் தேவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்கிறது. உங்கள் வாழ்க்கையை ஸ்திரப்படுத்தும் வல்லமை தேவனுக்கு இருக்கிறது. என் வாழ்வில் எல்லாம் உருக்குலைந்துபோனது; நான் அவ்வளவுதான் என்று நீங்கள் சொல்லலாம். தேவனுக்கு பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் இருப்பதால் உங்கள் வாழ்க்கை ஸ்திரமாக செல்லும்படி தேவன் காக்கிறார். அவருக்கே பரலோகிலும் பூலோகிலும் எல்லா அதிகாரமும் வல்லமையும் இருப்பதால், அவரால் மாத்திரமே எல்லாமும் ஸ்திரமாக இருக்கும்படி காத்துக்கொள்ள முடியும். இங்கே தூண் என்பதற்கு நீதிமான்கள் என்று அர்த்தமாகும். யாக்கோபும், கேபாவும், யோவானும் தூண்கள் என்று அழைக்கப்பட்டனர் (கலாத்தியர் 2:9). தேவன், உங்களையும் தம்முடைய நீதியுள்ள தூண் என்று அழைக்கிறார். "ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்" என்று அவர் கூறுகிறார். இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் ஜெப வீரர்களே, தங்கள் ஜெபங்களாலும் கண்ணீராலும் மக்களுக்கு ஆசீர்வாதத்தையும், மக்களுக்கு  தேவனிடமிருந்து அற்புதங்களையும் கொண்டு வருவதால், அவர்களை ஊழியத்தின் தூண்கள் என்று நாங்கள் அழைக்கிறோம். நீங்கள் விழுந்துவிடாமல், தேவனிடம் ஏறெடுக்கப்படும் ஜெபங்கள், இயேசுவின் கண்ணீர் இவற்றின் மூலமாக ஆண்டவர் உங்களை காக்கிறார். நான் முதலாவது என் ஊழியத்தை ஆரம்பித்தபோது, தேவனுடைய வசனமே நான் முன்னே செல்லும்படி காத்தது. இப்போது நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்போது, அவரது வசனமே நான் ஸ்திரமாக முன்னேறிச் செல்ல உதவுகிறது. "தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்" (யாக்கோபு 4:7) என்று வேதம் கூறுகிறது. பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்ற இந்த வசனத்தை நான் பற்றிக்கொண்டு, என் வாழ்க்கையை முற்றிலும் தேவனுக்கு ஒப்படைத்திருக்கிறேன். சோதனைகள் எழும்பும்போது, நான் பிசாசுக்கு எதிர்த்து நின்றேன்; அவன் என் வாழ்க்கையை விட்டு ஓடிப்போனான்.  நாம், தனியாக பிசாசை எதிர்த்து நிற்பது கடினம். ஆனால், நாம் பரிசுத்த ஆவியினாலும் தேவனுடைய வசனத்தினாலும் நிறைந்திருக்கும்போது, நம்மால் எதிர்த்து நிற்க முடியும். நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் நாம் விழுந்துவிடாமல் நம்மை இரட்சிக்கிறார்; தேவனுடைய வசனம் நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்லும்படி நம்மை காக்கிறது.

"நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்" (சங்கீதம் 37:23, 24) என்று வேதம் கூறுகிறது. பாருங்கள்! ஆண்டவர் எவ்வளவு நேர்த்தியாக நம் வாழ்க்கையை நடத்துகிறார். அவர் நம் கரத்தை பற்றிக்கொண்டு, நாம் விழுந்துவிடாமல் காக்கிறார். நாம் ஒருபோதும் விழுந்துபோவதில்லை. அவருடைய பிடி உறுதியாயும், அவருடைய அன்பு மாறாததாயும் இருக்கிறது. ஆண்டவர் நம்மை தேவனுடைய ஆலயத்தின் தூண்களாக வைப்பார். அன்பானவர்களே, நீங்கள் தேவனுடைய தூணாயிருக்கிறீர்கள். அவர் உங்களை வாழ்க்கையில் ஸ்திரப்படுத்துவார்.

ஜெபம்:
பரம தகப்பனே, இப்போதும் உம்முடைய அன்பின் கரம் என்னை பற்றிக்கொள்ளவேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஆண்டவரே, இரும்பு தூணைப்போல என்னை உறுதியாக்கும். எந்தத் தீங்கும் என்னை தொடாமல் காத்துக்கொள்ளும். சோதனைக்கு எதிர்த்து நிற்க எனக்கு உதவும். என் வாழ்வில் நேரிடுகிற எல்லா சோதனைகளையும் நான் கடிந்துகொள்கிறேன். என் வாழ்விலிருந்து வேண்டாத காரியங்கள் எல்லாவற்றையும் அகற்றி, நான் நீதிமானாய் விளங்கும்படி செய்யும். ஒவ்வொருநாளும் நான் அதிகமதிகமாய் நீதியாயும் பரிசுத்தமாயும் மாறும்படி செய்யும். என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பும். என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் பண்ணும். என் பாத்திரம் நிரம்பி வழியட்டும். ஆண்டவரே, என் வாழ்க்கையை உறுதியாக்கி, நான் தொடர்ந்து செல்லுவதற்கு உதவும். என்னை பெலப்படுத்துகிற உம்மால் எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும். எனக்கு நீர் மிகவும் சமீபமாய் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.