அன்பானவர்களே, இன்றைக்கு இயேசுவிடமிருந்து உச்சிதமான ஒன்றை பெற்றுக்கொள்ளப்போகிறோம். அவர் உங்களுக்குத் தரும் நன்மையை பற்றிக்கொள்ளுங்கள். "நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்" (2 கொரிந்தியர் 5:6) என்று வேதம் கூறுகிறது. இன்று, தேவன் நம்மை விசுவாசித்து நடக்கப்பண்ணுவார். என்னுடைய பாட்டி திருமதி ஸ்டெல்லா தினகரன், விசுவாசித்து நடந்தே வாழ்ந்து வருகிறார்கள். இன்றைய தினம், அவர்கள் இரட்சிக்கப்பட்ட நாளாகும். அவர்கள் மூலமாக தொடப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட கணக்கற்ற மக்களின் வாழ்க்கைக்காக தேவனுக்கு நன்றி செலுத்துவோம். தன்னுடைய விசுவாசத்தின் மூலம் அவர்கள் பலரை கிறிஸ்துவுக்குள் ஊக்கப்படுத்தி, உயிர்ப்பித்திருக்கிறார்கள். இப்போது, தேவன் நமக்கு அதே விசுவாசத்தை தருகிறார். நாம் தரிசித்து நடக்கவேண்டுவது இல்லை.
 
திரைப்படத்தில் சண்டை போடக்கூடியவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு துணியினால் தன் கண்களைக் கட்டிக்கொண்டார். தன்னுடைய மற்ற புலன்களை பயன்படுத்தி சண்டையிட அவர் விரும்பினார். கண் பார்வையை சார்ந்திருப்பதற்கு பதிலாக, காலடி சத்தத்தை கேட்டு அல்லது தன்னைச் சுற்றியிருக்கும் காற்றில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து வேகமாக செயல்பட அவர் விரும்பினார். தன்னுடைய மற்ற புலன்களை பயன்படுத்தி அவர் பயிற்சியெடுத்தார். நாமும் அவ்வாறே நம்முடைய கண்களை மூடிக்கொள்ளப்போகிறோம். நம்முடைய கண்களை எவற்றை பார்க்கின்றன? நாம் காணும் உலகத்தின் இச்சையால் இயேசுவை விட்டு தூரம் போய் உலகத்திற்குள் ஆழ்ந்துபோகிறோம் என்று வேதம் கூறுகிறது (1 யோவான் 2:16). நமக்கு முன்னே இருக்கும் பயத்தையும் நம் கண்கள் காண்கின்றன. மற்றவர்கள் விழுவதைக் கண்டு, நாமும் விழுந்துவிடுவோமா என்று பயப்படுகிறோம். மற்றவர்கள் அசாதாரணமான காரியங்களை சாதிப்பது கண்டு, நம்மால் அதைச் செய்ய முடியுமா என்று கவலைப்படுகிறோம். நம் வாழ்க்கைப் பாதையை எண்ணி பயப்படுகிறோம். அன்பானவர்களே, நாம் விசுவாசித்து வாழவேண்டும்.

விசுவாசம், இந்த உலகத்தின் இச்சையினால் நாம் பட்சிக்கப்படாதபடி, தேவனுடைய சௌந்தரியத்தின்மேல் கவனமாயிருக்க நமக்கு உதவும். நாம் இயேசுவுடன் ஜீவிக்கும்போது, அவருடைய சௌந்தரியத்தில் நம்மை மறந்து பெரிய சந்தோஷத்தை கண்டடைவோம். விசுவாசமானது, முன்னே இருக்கும் ஆசீர்வாதமான பாதையை நாம் காணும்படி செய்து, இடற மாட்டோம் என்ற திடநம்பிக்கையை நமக்கு அளிக்கிறது. விசுவாசம், "ஆண்டவர் உனக்கு நன்மையை வைத்திருக்கிறார்," என்று நம்மை எப்போதும் கர்த்தருக்குள் ஸ்திரப்படுத்தும். விசுவாசமானது, தேவன் நமக்கென்று வைத்திருக்கிற பாதையில் நம்மை நடக்கப்பண்ணும்;அவர் நமக்கென்று வைத்திருக்கிற வாக்குத்தத்தத்தை நாம் காணும்படி செய்யும்.  வரும் காரியங்களை நோவா கண்டதினால் அவன் பேழையை உருவாக்கும்போது பயப்படாதிருந்தான். நடக்க இருப்பதை காண்பதற்கு விசுவாசம் அவனுக்கு உதவியது. தேவன், தேசத்தை அவர்களுக்கு வாக்குப்பண்ணியிருந்ததால், மிகவும் பலத்தவர்களாக இருந்த கானானியருக்கு விரோதமாக யுத்தம் செய்ய காலேப் ஒருபோதும் பயப்படவில்லை. விசுவாசம் உங்களை பெலப்படுத்தி, தேவனுடைய வாக்குத்தத்தத்தை பற்றிக்கொள்ளச் செய்கிறது. விசுவாசத்தில் தம்மோடு உலாவுவதற்கு ஆண்டவர் உங்களுக்கு அருள்புரிவாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மோடு நெருங்கி ஜீவிப்பதற்கான கிருபையை எனக்கு தந்தருளும். உம்மை காணவும், இந்த உலகில் நான் காண்பவற்றினால் பயந்துவிடாமல், உமக்கு பின்னே விசுவாசத்தில் நடப்பதற்கு எனக்கு உதவி செய்யும். நான் முழுவதும் உம்மை நம்பும்படி என் உள்ளான விசுவாசத்தை பெலப்படுத்தும். காரியங்கள் குழப்பமாக இருந்தாலும், நான் விசுவாசத்தில் வழுவாமலும் மாறாமலும் இருக்க உதவி செய்யும். உம்முடைய வாக்குத்தத்தங்களிலும், நீர் எனக்கென்று அமைத்திருக்கிற பாதையிலும் எப்போதும் நம்பிக்கையாயிருக்க உதவும். என்னை விசுவாசத்தில் வழிநடத்தவேண்டுமென்றும், நான் நடக்கிற பாதையை ஆசீர்வதிக்கவேண்டுமென்றும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.